×

கன்னி

23.5.2024 முதல் 29.5.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. அவரோடு குரு சுக்கிரன் சூரியன் முதலியோர் இணைந்திருப்பதும் அவர்கள் தைரிய வீரிய ஸ்தானத்தைப் பார்வையிடுவதும் சிறப்பு. பொதுவாகவே பாக்கியஸ்தானம் சற்று பலமடைந்து இருப்பதால், எந்தப் பிரச்னைகளும் பெரிய அளவில் பாதிக்காது. தெய்வ தரிசனமும் பெரியோர் ஆசிகளும் உண்டு. வீட்டில் சுபகாரியம் நடைபெற வாய்ப்புண்டு. ஆடை ஆபரணச் சேர்க்கைகள் நடைபெறும். கொடுத்த கடன் வசூல் ஆகிவிடும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். துணிவும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கவனம் தேவை: ராசியில் கேது இருப்பதும், ராகு செவ்வாய் இணைந்து ராசியில் உள்ள கேதுவைப் பார்ப்பதும் சாதகமான அமைப்புகள் அல்ல. மறைமுகமான எதிர்ப்புகள் உண்டு. காரிய தடைகள் ஏற்படுவதோடு தலை பாகத்தில் சிறிய அளவு ஆரோக்கிய குறைவு ஏற்பட வாய்ப்பு அதிகம். அவசரப்பட்டு வார்த்தைகளை கொடுத்துவிட்டு அதை விவகாரம் ஆக்கி விடக்கூடாது. குழப்பங்கள் அவ்வப்போது மனதிலே எழுவதற்கான சூழ்நிலைகளை ஜென்மத்தில் அமர்ந்திருக்கும் கேது உண்டாக்குவார்.

பரிகாரம்: சனிக்கிழமை காகத்திற்கு ஒரு உருண்டை சாதம் வையுங்கள். பிதுர் காரியங்களை மறக்க வேண்டாம்.

Tags : Virgin ,
× RELATED கன்னி